சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.440 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல்தொடர்ந்து, 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.72,400க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
The post ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 குறைந்தது appeared first on Dinakaran.