
கார் விற்பனையில் மாருதி நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 1.18 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகிந்திரா நிறுவனம் உள்ளது. எஸ்.யூ.வி ரக கார்கள் மட்டும் 47,306 கார்கள் விற்பனையாகியுள்ளன. அண்மையில் விற்பனையில் சரிவு ஏற்பட்டாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 18.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 65.42 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 303 இரு சக்கர வாகனங்கள், 4 ஆயிரத்து 604 ஆட்டோக்கள், 6 ஆயிரத்து 769 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 22 ஆயிரத்து 809 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 1,948 டிராக்டர்கள் உள்பட ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 978 வாகனங்கள் பதிவாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 978 ஆக இருந்தது. இதோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு 8.33 சதவீதம் அதிகரித்துள்ளது.