சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்படும் தேதி குறித்து கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று உயர்க்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன்-2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் முன்னதாக தெரிவித்தார். இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ல் திறக்கப்படும் appeared first on Dinakaran.