2வது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு: 4 நாள் நடக்கிறது

3 hours ago 2

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளில் உயரமான, செங்குத்தான பகுதிகளில் வாழும் வரையாடுகள், மிக குறைந்த எண்ணிக்கையில் அழிவின் பட்டியலில் உள்ள விலங்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில் நீலகிரி வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023ம் ஆண்டில் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு முதல் முறையாக கேரளா-தமிழகம் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் 1,031 வரையாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தாண்டு இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று (24ம் தேதி) இன்று துவங்கிவரும் 27ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

The post 2வது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு: 4 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article