சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் கூடுதலாக பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்தது. தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்ஸ்கான் நிறுவனம் சிங்கப்பூர் கிளை மூலம் ஐந்தே நாட்களில் ரூ.12,800 கோடி கூடுதல் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு சப்ளை செய்யும் ஐபோன்களின் உற்பத்தி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பால் பாக்ஸ்கான் நிறுவன லாபம் 2 மடங்காக அதிகரித்து 2025ல் ரூ.1.7 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்காக பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ஐபோன்களை தயாரிக்கிறது.
The post தமிழ்நாட்டில் உள்ள ஐபோன் தொழிற்சாலையில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்தது பாக்ஸ்கான் நிறுவனம்!! appeared first on Dinakaran.