சென்னை: சென்னையில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. டெல்லி, மும்பை, சேலம், ஷீரடி, ஐதராபாத் செல்ல வேண்டிய 6 விமானங்கள் தாமதமாக சென்றன. சென்னையில் திடீரென பெய்த கனமழையால் 16 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர்.
The post சென்னையில் பெய்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு!! appeared first on Dinakaran.