கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

3 hours ago 2

சென்னை: கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சம் வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. மற்ற லட்சக்கணக்கான வைரஸ் தொற்று போன்றுதான் கொரோனாவும் அவ்வப்போது வரும். மற்ற வைரஸ் தொற்று போலத்தான் கொரோனாவும் கட்டுப்படுத்தப்படும். கொரோனா தொற்றால் யார் பாதிக்கப்படுகிறார்கள், எந்த அளவுக்கு வீரியமாக இருக்கிறது என்பதே முக்கியம் என அவர் கூறினார்.

The post கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article