தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

2 months ago 12

சென்னை,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தள்ளிப்போனது. இது நாளையோ அல்லது நாளை மறுதினமோ உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்த 6 நாட்களும் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article