
ஸ்ரீநகர்,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்தை மாநில அரசு அறிவித்தது.