தமிழ்நாட்டில் 4 நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் காண ஏற்பாடு

2 hours ago 1

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் பல்வேறு நகரங்களில் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் காண ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

22,23ம் தேதிகளில் கோவையிலும், 29,30ம் தேதி நெல்லையிலும், ஏப்ரல் 5,6ம் தேதி மதுரையிலும் , மே 3,4 ம் தேதி திருச்சியிலும் போட்டிகள் திரையிடப்பட உள்ளது

Read Entire Article