என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்

4 hours ago 2

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் குஜாராத் அணிக்காக சிராஜ் விளையாட உள்ளார். இந்த நிலையில், , ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணியில் இடம் கிடைக்காதது தொடர்பாக சிராஜ் கூறியதாவது, 

அணியின் தேர்வு என் கையில் இல்லை. என் கைகளில் ஒரு கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது, அதை வைத்து என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். நான் என் செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நான் சில வருடங்களாக விளையாடி வருகிறேன். பொதுவாக, எங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடைப்பதில்லை.ஆனால் இப்போது எனக்கு சிறிது ஓய்வு கிடைத்ததால், எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். என தெரிவித்தார் .

Read Entire Article