சென்னை: தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது.
மேலாண்மை ஒதுக்கீட்டு கட்டணங்கள்
தமிழ்நாட்டில் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டு கட்டணங்கள்
21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீட்டுக்கான கட்டணம்
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் ரூ.24,50000 ஆக இருந்த மருத்துவக் கல்விக் கட்டணம் ரூ.27 லட்சமாக உயர்ந்துள்ளது.
NRI கைவிடப்பட்ட ஒதுக்கீடு (NRI Lapsed Quota) ரத்து:
இந்த வகை நீக்கப்பட்டுள்ளதால், NRI ஒதுக்கீட்டில் காலியாகும் இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படும்.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.5.40 லட்சம், நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.16.20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு கட்டணங்கள்
வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.29.4 லட்சத்திலிருந்து மருத்துவக் கல்வி கட்டணம் ரூ.30 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கட்டணத்தில் நிர்ணயிக்கப்பட்டவை:
கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம்/கணினி/இணைய கட்டணம், நூலக கட்டணம், விளையாட்டு கட்டணம், பராமரிப்பு மற்றும் வசதிக் கட்டணம், சாராத செயல்பாடுகளுக்கான கட்டணம் மற்றும் பிற தொடர்ச்சியான செலவினங்கள் ஆகியவை இந்தக் கட்டணத்தில் அடங்கும்.
The post தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு..!! appeared first on Dinakaran.