தேவையான பொருட்கள்
½ கப் கடலை பருப்பு வேகவைத்தது
1கப் கேரட் துண்டுகள்
1கப் ஜுக்கினி துண்டுகள்
1கப் காலிஃப்ளவர் மொக்குகள், வேகவைய்தது
1 கப் பச்சை குடை மிளகாய்
1 கப்வெங்காயம் பொடியாக நறுக்கியது
½கப் வாட்டர் க்ரெஸ்
1 மேஜை கரண்டி நல்லெண்ணை
1 தேக்கரண்டி கடுகு
சிட்டிகை பெருங்காயம்
1 தேக்கரண்டி சீரகம்
¼ கப் கறிவேப்பிலை
½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
3பச்சை மிளகாய் பொடியாக நருக்கியது
1 தேக்கரண்டி இஞ்சி, பொடியாக துருவியது
1 தேக்கரண்டி பூண்டு, பொடியாக துருவியது (ஆப்ஷனல்)
1 மேஜை கரண்டி மசாலா பொடி
1கப் தேங்காய் பால்
¼ கப் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
தேவையாண உப்பு
செய்முறை:
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். கடலை பருப்பை 2 மடங்கு நீருடன் ஒரு கிண்ணத்தில் பிரஷர் குக்கரில் வைத்து வேகவைக்க.தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் கொதிக்க வைக்க. ஸ்டீம் பேஸ்கட் அதில் வைக்க. காலிஃப்ளவர் மொக்குகளை அதில் வைக்க. வேண்டும். மொக்குகள் சிறிது சாஃப்ட் ஆன பின் அடுப்பை அணைக்க. பேஸ்கட்டை வெளியே எடுக்க. தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, பொறிக்க, 2 நிமிடம். பின் சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆனதும். 2 நிமிடம்; 3 கப் நீர் சேர்க்க. காலிஃப்ளவர தவிர மீதி காய்கறிகள் சேர்த்து மூடி வேகவைக்க. சாஃப்ட் ஆனால் போதும் வெந்த கடலை பருப்பு சேர்க்க. கொதிகட்டும். காலிஃப்ளவர் சேர்க்க. மசாலா பொடி சேர்த்து கிளற. நெருப்பை சிம்மர் செய்க.2 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. உப்பு சேர். நான் ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு உபயோகிக்கிறேன். மத்தால் அல்லது கரண்டியாலோ காய்கறிகளை மசித்து கொள்ளுங்கள். கொத்தமல்லி சேர்க்க..ருசி பார்க்க. ஒரு சின்ன கிண்ணம் சூப் சாப்பிட்டால் அதுவே முழு உணவு.
The post தேங்காய் பால் சூப் appeared first on Dinakaran.