தமிழ்நாட்டின் வேர்கள், நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை - மு.க.ஸ்டாலின்

4 hours ago 4

சென்னை,

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகள் இன்று சந்தித்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுடன் ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டேன்.

தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது

பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article