பணி: Senior Analyst. மொத்த காலியிடங்கள்: 14.
வயது: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/பிற்பட்டோர்/ முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோர்/சீர்மரபினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.56,100-2,05,700.
தகுதி: வேதியியல்/உயிரி வேதியியல்/ உணவு தொழில்நுட்பம்/நுண்ணுயிரியல் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி பட்டம்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். தகவல் இ.மெயிலில் தெரிவிக்கப்படும்.
கட்டணம்: எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதர பிரிவினருக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 17.04.2025.
The post தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை appeared first on Dinakaran.