தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம்

1 week ago 2

 

தஞ்சாவூர், பிப்.1: உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு உதவி தொகை ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியூசி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் கீழராஜவீதி ஏஐடியூசி மாவட்ட அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் மாநில குழு உறுப்பினர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தில்லைவனம் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும், உடல் உழைப்பு, கட்டுமான, ஆட்டோ சங்கம் உள்ளிட்ட நல வாரியங்களில் மெத்தனமாக நடைபெறும் பணிகள், திட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கோரிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். கூட்டத்தில் ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரகுமார், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், வாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிரம்பிய பெண் தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை காரணம் காட்டி ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படுவது வாரிய விதிகளுக்கு எதிரானது. எனவே அவர்களுக்கு மாத ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நாட்களில் இருந்து உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் இ ஷ்ராம் திட்டத்தில் சுமார் 85 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு விபத்து காப்பீடு 2 லட்சம் வழங்கப்படுகிறது 31.3.2022 தேதிக்குள் முன்பாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த பலன் வழங்கப்படும் என்பதை இஷ்ராம் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் விபத்து காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு அமுல்படுத்த திட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில குழு நிர்வாகிகள் கோவை நாராயணன், சேலம் சந்திரன், விழுப்புரம் பெரியநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் சேவையா நன்றி கூறினார்.

The post தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article