தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறை செயலாளரை உறுப்பினராக நியமிக்கும் சட்ட மசோதா: துணை முதல்வர் கொண்டு வந்தார்

6 hours ago 2


சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், மாற்றுத்திறன் அடிப்படையிலான பாகுபாட்டை தடைசெய்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016-ன் (மத்திய சட்டம்) 3-ம் பிரிவின்படி, பல்கலைக்கழகங்களின் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவதற்கு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான தகுதியின்மையை நீக்குவதற்கு, சில பல்கலைக்கழக சட்டங்களில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலும் அவர்கள் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மையை நீக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறை செயலாளரை உறுப்பிர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

The post தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறை செயலாளரை உறுப்பினராக நியமிக்கும் சட்ட மசோதா: துணை முதல்வர் கொண்டு வந்தார் appeared first on Dinakaran.

Read Entire Article