சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும், தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னிலை மாநிலமாக திகழ்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வேலைவாய்ப்பு, பொருளாதரத்தை அதிகரிக்க ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் வகையில் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதில் அமைச்சர்கள், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்கனவே ஆட்டோ மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் வகையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
The post தமிழ்நாடு அரசுக்கும், டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Dinakaran.