'தமிழ் வாரம் கொண்டாட அனுமதி கொடுப்பார்களா?' - சீமான் கேள்வி

3 months ago 20

விழுப்புரம்,

சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"ஒரே மொழியை எல்லோரும் படிக்க வேண்டும், பேச வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தேச ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகிவிடும். இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நாடெங்கும் இந்தி வாரம் கொண்டாடுகிறார்கள். ஆனால் டிடி தமிழ் தொலைக்காட்சி யாருடைய பணத்தில் நடத்தப்படுகிறது?

மாநில அரசின் வருவாய்தான் மத்திய அரசின் வருவாய். என் காசு வேண்டும், என் மொழி வேண்டாமா? இந்தி வாரம் கொண்டாடுவதைப் போல் தமிழ் வாரம் கொண்டாட எங்களுக்கு அனுமதி கொடுப்பார்களா?"

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Read Entire Article