போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு - 11 பேர் பலி

5 hours ago 1

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டில் சர்வாதிகாரியாக இருந்த அதிபர் டெனியல் அரப் மொய்க்கு எதிராக 1990ம் ஆண்டு ஜுலை 7ம் தேதி மக்கள் போராட்டம் வெடித்தது. அதன்பின்னர் டெனியல் ஆட்சி முடிவுக்கு வந்து கென்யாவில் ஜனநாயக ஆட்சிக்கான முயற்சிகள் தொடங்கின.

இந்நிலையில், கென்யாவில் மக்கள் புரட்சி வெடித்து நேற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் நினைவாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அதிபராக உள்ள வில்லியல் ருடோ ராஜினாமா செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார், தடியடி நடத்தினர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர்கள் 11 பேஎர் உயிரிழந்தனர். 52 போலீசார் காயமடைந்தனர்.வன்முறையை கட்டுப்படுத்த தலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article