
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து, 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 51' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையக்கவுள்ளார். இந்தநிலையில், தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிம்பு 'எஸ்டிஆர் - 49' படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகளை இன்று முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.