
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.