சாம்பியன்ஸ் டிராபி; நியூசிலாந்து, இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம் - பாகிஸ்தான் வெளியேறியது

3 hours ago 1

ராவல்பிண்டி,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலம், குரூப் ஏ-வில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த பிரிவில் இடம் பிடித்த மற்ற அணிகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறின. இந்த பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 

Read Entire Article