
சென்னை,
தமிழில் 'நம்பர் 1' நாளிதழான தினத்தந்தி, 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களைக் கடந்து தமிழ் மக்களின் இதயத் துடிப்பாக, தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை தொடர்ந்து பறைசாற்றி வரும் தினத்தந்தியில், காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய தலைமுறையினர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக dailythanthi.com தொடங்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.
உள்ளூர் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களும் தாய்மொழியாம் தமிழ் வழியில் செய்திகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ள தொடங்கப்பட்ட dailythanthi.com தடைகள் பல கடந்து, தினத்தந்தி நாளிதழ் போலவே தற்போது முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இணைய வழியில் செய்திகளை வெளியிட்டு வரும் டாட் காம்களின் தரவரிசை பட்டியலை காம்ஸ்கோர் என்ற நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தமிழ் செய்தி வெளியீடுகளில் dailythanthi.com முதலிடம் பிடித்துள்ளது. 59 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாதாந்திர பயனாளர்களை கொண்டுள்ளது. dailythanthi.com-ன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், திரெட்ஸ், வாட்ஸ்-அப் ஆகிய சமூக வலைதளங்கள் 53 லட்சம் பயனாளர்களை ஈர்த்துள்ளது.
இந்திய அளவில் 80 சதவீதத்தினரும், சர்வதேச அளவில் 20 சதவீதத்தினரும் dailythanthi.com-ல் செய்திகளை பார்வையிடுகின்றனர். தினத்தந்தி ஆப்பை 10 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். dailythanthi.com-ல் வெளிவரும் வெப் ஸ்டோரியை 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளிக்கின்றனர். dailythanthi.com பார்வையாளர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள், 35 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
dailythanthi.com மென்மேலும் வளர்ந்து சிகரம் தொட வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு என்றென்றும் அவசியம். உங்களின் தேவையே எங்களின் சேவை.