
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. 23 வயதாகும் ஸ்ரீலீலா 'புஷ்பா-2' படத்தில் போட்ட குத்தாட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து கார்த்திக் ஆர்யன் ஜோடியாக புதிய இந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
பான் இந்தியா அளவில், 'சென்சேஷனல்' நடிகையாக மாறி போயிருக்கும் ஸ்ரீலீலா தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்தார். அவர் கூறும்போது, "சினிமாவில் இத்தனை ரசிகர்களை சம்பாதித்தது மகிழ்ச்சியான ஒன்று. தெலுங்கு தாண்டி தமிழில் முதன் முறையாக 'பராசக்தி' படத்தில் நடித்துள்ளேன்.
இதுதவிர இன்னும் நிறைய படங்கள் நடித்து தமிழ் சினிமாவிலும் கலக்க ஆசைப்படுகிறேன். அதேபோல பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருவது உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. பாலிவுட்டில் நடிப்பது பலரது கனவு. அது நிறைவேறியதில் பெருமைப்படுகிறேன்.
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இன்னும் அதிகளவில் இடம்பிடிப்பேன்" என்று தெரிவித்தார்.