
சென்னை,
எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி விரைவு ரெயில் (ரெயில் எண். 06061) மே 14, 21, 28 மற்றும் ஜூன் 04, 2025 (புதன்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்
திரும்பும் திசையில் (ரெயில் எண். 06062) வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சந்திப்பு விரைவு ரெயில் மே 15, 22, 29 மற்றும் ஜூன் 05, 2025 (வியாழக்கிழமைகளில்) மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு காலை 11.55 மணிக்கு சென்றடையும்.
பெட்டிகள் அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு ரெயில் பெட்டி, 3- ஏசி மூன்று அடுக்கு ரெயில் பெட்டிகள், 8- ஸ்லீப்பர் வகுப்பு ரெயில் பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு ரெயில் பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு ரெயில் பெட்டிகள் உள்ளன.