தமிழில் வெளியாகும் உன்னி முகுந்தனின் 'மார்கோ' திரைப்படம்

6 months ago 22

சென்னை,

நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன்.

இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.10.8 கோடி வசூல் செய்துள்ளது. திரைப்படம் இதுவரை உலகளவில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தை தமிழில் வரும் ஜனவரி 3ம் தேதி வெளியிடவுள்ளனர். இப்படம் இந்தியில் வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாகிறது.

#Marco Hindi Version GCC release from Jan 1st,2025!#Marco #running #successfully #blockbuster #incinemasnow #gcc pic.twitter.com/Lhpa7eOg6X

— Unni Mukundan (@Iamunnimukundan) December 28, 2024

M️RCO - Tamil Release from January 3,2025.#Marco #tamil #release #jan3 pic.twitter.com/yfEMXL2FAs

— Unni Mukundan (@Iamunnimukundan) December 29, 2024
Read Entire Article