சென்னை,
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரேவதி. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரேவதி ஏற்கனவே 2002-ல் மித்ர மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தை இயக்கினார்.
தொடர்ந்து இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களையும் டைரக்டு செய்தார். தற்பொழுது தமிழில் ஒரு வெப் சீரிசை இயக்குகிறார். இது குறித்து புகைப்படம் வெளியிட்டு ரேவதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெப் சீரிஸ் பிரபல ஓ.டி.டி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். கடந்த 5-ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விரைவில் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.