
தமிழகத்தை கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வடதமிழகத்தில் வெப்பக்காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக திருத்தணி, ஈரோடு, மதுரை ஆகிய 3 பகுதிகளில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி, வேலூரில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தியில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை, திருப்பத்தூரில் தலா 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக குன்னூரில் 76 டிகிரி பாரன்ஹீட், உதகையில் 71 டிகிரி பாரன்ஹீட், கொடைக்கானலில் 66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.