எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியீடு

6 hours ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வை 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள், 4,755 தனித் தேர்வர்கள், 137 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதினார்கள்.

இதேபோல், மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. காலை 9 மணிக்கு வெளியாகும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மதியம் 2 மணிக்கு வெளியாகும் பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட இருக்கின்றன.

Read Entire Article