“தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கைதான்!” - வேலூர் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

1 week ago 6

வேலூர்: “தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்வது சரியில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், ‘2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக வேலூர் மண்டல இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ‘இலக்கு 2026 - இலட்சிய மாநாடு’ வேலூர் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியது “இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம், ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையில் இருந்து புறப்பட்டுவிட்டது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும்.

Read Entire Article