தமிழகத்தி்ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

3 months ago 23

சென்னை,

தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன் காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளை தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதி கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் சார்பில் மழை காரணமாக பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்தநிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article