தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

4 months ago 16

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் நிறைவடை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையில் 15 செமீ, தஞ்சாவூர் ஒரத்தநாடில் 13 செமீ, கன்னியாகுமரி கோழிப்போர்விளை, தக்கலை, நெய்யூர், திருவாரூர் மன்னார்குடி, தஞ்சை ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 11 செமீ, அரியலூர் மாவட்டம் சுததமல்லி அணை, குடவாசல், இரணியலில் தலா 10 செமீ, மஞ்சளாறு, நீடாமங்கலத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

Read Entire Article