தமிழகத்தில் முதலீடு: 4 சுவீடன் நிறுவனங்கள் விருப்பம்

12 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஐகியா உள்பட 4 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளதாக சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 70 சுவீடன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 25,000 பேர் பணிபுரிகின்றனர். டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில் மற்றும் ஐகியா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுவீடன் நிறுவனங்கள் சில தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. சென்னையில் ஸ்கேண்டினாவியான் ரோபோட் சிஸ்டம்ஸ் புதிய தொழிற்சாலையை 2025 ஜன.21-ல் தொடங்குகிறது. கோவையில் ஜேகோபி நிறுவனம் தனது புதிய ஆலைக்கான பணியை 2025 ஜனவரி 22-ல் தொடங்குகிறது.

The post தமிழகத்தில் முதலீடு: 4 சுவீடன் நிறுவனங்கள் விருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article