தமிழகத்தில் முக கவசம் கட்டாயமா? - சுகாதாரத்துறை விளக்கம்

8 hours ago 1

சென்னை,

கொரோனா பாதிப்பு, 2019ம் ஆண்டு இறுதி முதல், 2023ம் ஆண்டு வரை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், தீவிர பாதிப்பாக இதுவரை மாறவில்லை. தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான,ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன.

இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார். முக கவசம் அணிவது அவசியம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Read Entire Article