“தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்துக” - முத்தரசன்

1 month ago 9

திருப்பத்தூர்: “தமிழகத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களை முழுமையாகத் தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழா இன்று (மார்ச் 31) நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்று உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் நிதி வழங்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

Read Entire Article