தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது - சசிகலா பேட்டி

4 months ago 13

சென்னை,

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையில் வி.கே. சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. எங்களின் இருபெரும் தலைவர்கள் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக இருக்கும்.

தி.மு.க. விழா நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுகிறார். வருகிற தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article