தமிழகத்தில் கூடுதலாக 20 ஆவின் உற்பத்தி மையம்

2 months ago 13

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கூடுதலாக 20 ஆவின் உற்பத்தி மையங்கள் துவங்கப்பட உள்ளது. ராமநாதபுரத்தில் நடந்த 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விவசாயிகள், மகளிர், வியாபாரிகள், பொதுமக்கள், தனிநபர் என பல தரப்பினரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் திட்டங்களை வழங்கி பாதுகாக்கும் தலைவராக முதலமைச்சர் இருந்து வருகிறார்.

தற்போது ஆவின் நிர்வாகம் மூலம் மற்ற தனியார் நிறுவனங்களை விட ஒரு லிட்டருக்கு ரூ.12 விலை குறைத்து பால் விநியோகிக்கப்படுகிறது. ஆவின் உற்பத்தி பொருட்கள் திறனை அதிகரித்திடும் வகையில் தமிழகத்தில் கூடுதலாக 20 உற்பத்தி மையங்கள் துவங்கப்பட உள்ளது’’ என்றார்.

The post தமிழகத்தில் கூடுதலாக 20 ஆவின் உற்பத்தி மையம் appeared first on Dinakaran.

Read Entire Article