திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல்லில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சொத்து வரியை ஏற்கெனவே பல மடங்கு உயர்த்திய பிறகும், ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.