தமிழகத்தில் இன்றும் 13 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பதிவு

4 hours ago 1

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்துகிறது. கோடைகாலங்களில் கூட இல்லாத வகையில் தற்போது வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்களின் விவரம் வருமாறு:-

மதுரை விமான நிலையம் - 104 டிகிரி (41 செல்சியஸ்)

மதுரை நகரம் - 103.64 டிகிரி (39.8 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்)

வேலூர் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

தூத்துக்குடி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

ஈரோடு - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

திருச்சி - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

கடலூர் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

கரூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்)

Read Entire Article