தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்

1 month ago 4

சென்னை,

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வருவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், உடல் அசவுகரியங்கள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article