
சென்னை,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலை துணிவுடன் எதிர்கொள்ளும் இந்திய படைகளுக்கு ஆதரவாக இன்று மாலை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்களுக்காக குடிநீர், பெண்களுக்காக நகரும் கழிப்பறை மற்றும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.