
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (23.02.2025) மற்றும் நாளை (24.02.2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
25.02.2025 முதல் 01.03.2025 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (23.02.2025) மற்றும் நாளை (24.02.2025) அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
25.02.2025 முதல் 27.02.2025 வரை: அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.
வெப்ப அளவின் வேறுபாடு:-
தமிழகத்தில் இன்று (23.02.2025) மற்றும் நாளை (24.02.2025) அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
25.02.2025 முதல் 27.02.2025 வரை:அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (23.02.2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (24.02.2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.