
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2 தினங்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்தில் சில பகுதிகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகரந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27ம் தேதி உருவாகக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்க்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.