
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 105.8 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
மதுரை விமானநிலையம் - 105.8 டிகிரி பாரான்ஹீட்
கரூர் பரமத்தி - 104.9 டிகிரி பாரான்ஹீட்
மதுரை நகரம் - 104.72 டிகிரி பாரான்ஹீட்
ஈரோடு - 104.72 டிகிரி பாரான்ஹீட்
திருச்சி - 103.82 டிகிரி பாரான்ஹீட்
பாளையங்கோட்டை - 103.28 டிகிரி பாரான்ஹீட்
திருத்தணி - 103.1 டிகிரி பாரான்ஹீட்
சென்னை மீனம்பாக்கம் - 102.92 டிகிரி பாரான்ஹீட்
சென்னை நுங்கம்பாக்கம் - 102.2 டிகிரி பாரான்ஹீட்
கடலூர் - 102.2 டிகிரி பாரான்ஹீட்
பரங்கிப்பேட்டை - 101.84 டிகிரி பாரான்ஹீட்
வேலூர் - 101.48 டிகிரி பாரான்ஹீட்
நாகப்பட்டினம் - 101.3 டிகிரி பாரான்ஹீட்
சேலம் - 100.94 டிகிரி பாரான்ஹீட்