தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி: அரியலூர் மாவட்டம் முதலிடம்..!!

1 month ago 11

சென்னை: தமிழகம் மமுழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,07,098 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (16.05.2025) 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. இத்தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 8,07,098
*மாணவியர்களின் எண்ணிக்கை : 4,24,610.
*மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,488

தேர்ச்சி விவரங்கள்
*தேர்ச்சி பெற்றவர்கள்: 7,43,232 (92.09%)
*மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்கள் 3,39,283 (88.70%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 11,025.

*கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,11,172. தேர்ச்சி பெற்றோர் 7,39,539. தேர்ச்சி சதவிகிதம் 91.17%.
*கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.92% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

கூடுதல் விவரங்கள்
*மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7,558.
*100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 2,042.
*100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 282.

*பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 11.36 % சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 8.74% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை – 8,446.
*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை- 582.

*தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 9,205. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 8,460 (91.91%).
*தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 113 (90.40%).
*தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 4,326. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 950 (21.96%).

 

The post தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி: அரியலூர் மாவட்டம் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article