தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் மாற்றம்

3 months ago 24

சென்னை,

பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குனர்கள் மற்றும் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் என மொத்தம் 15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி அரசாணையாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சென்னைக்கும், ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மதுரைக்கும், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி திருப்பத்தூருக்கும், ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் உஷா திண்டுக்கல்லுக்கும், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சம்பத் தொடக்க கல்வி துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கரூர் முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் பெரம்பலூருக்கும், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அமுதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனராகவும், பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் கரூருக்கும், தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் விருதுநகருக்கும், நீலகிரி முதன்மைக்கல்வி அலுவலர் கீதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.இதுதவிர தனியார் பள்ளிகள் துணை இயக்குனர் சின்னராஜூ ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனர் சரஸ்வதி ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலராகவும், தொடக்க கல்வி துணை இயக்குனர் சுப்பாராவ் ஈரோடு முதன்மை கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனர் அண்ணாதுரை தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குனர் முத்துசாமி பள்ளிக்கல்வி துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Read Entire Article