தமிழகத்தின் கடன் ரூ. 9 லட்சம் கோடி

2 hours ago 2

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்தநிலையில் பட்ஜெட்டில் இன்று வரவு- செலவு பற்றி புள்ளி விவரத்துடன் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் வராதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

2025-26-ம் ஆண்டு திட்ட மதிப்பில் வருவாய் பற்றாக்குறை ரூ.41.634.93 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. வரி வசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாய்களை பெருக்கும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு வருவாய் பற்றாக்குறை 2026-2027-ல் ரூ.31,282.23 கோடி ரூபாய் குறையும் என்றும், 2027-28-ம் ஆண்டு இந தொகை18,02,48 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் மாநில அரசு 1 லட்சத்து 62 ஆயிரத்து 096.76 கோடிக்கு மொத்த கடன் பெற திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் 55,844.53 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுகடனை அரசு திருப்பி செலுத்தும்.

இதன் விளைவாக 31.3.2026 அன்று நிலுவையில் உள்ள கடன் 9.29.959.30 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் இப்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

Read Entire Article