தமிழகத்தின் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம்

4 hours ago 1

சென்னை,

கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கி உள்ளது. தொடங்கிய முதல் நாளிலேயே 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி வெப்பம் பதிவானது. அந்த வகையில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-

வேலூர் - 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்)

திருச்சி - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)

மதுரை விமான நிலையம் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

ஈரோடு - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)

திருத்தணி - 104.18 டிகிரி (40.1 செல்சியஸ்)

கரூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

சேலம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

பாளையங்கோட்டை - 100.4 (38 செல்சியஸ்)

இதுதவிர புதுச்சேரியில் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.

 

Read Entire Article