
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 91 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 37 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது இன்னிங்ஸின் 17-வது ஓவரை மயங்க் யாதவ் வீசினார்.
இந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட ஷஷாங்க் சிங் டீப் பேக்வர்ட் ஸ்கெயர் லெக் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார். மேலும் அந்த சிக்ஸரானது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. இந்நிலையில், ஷஷாங்க் சிங் விளாசிய இந்த இமாலய சிக்சர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.